வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014 - newmandaithivu

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 9, 2014

வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014




மண்டைதீவு முகப்புவயல் 
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
.
வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014
.

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி 
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி 
காஞ்சிமாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி
அன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி
.
முருகப்பெருமான்  மெய்யடியார்களே! .
மண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியுகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்களம் மிகு  ஜய வருடம் ஆனி மாதம் 4ஆம் நாள் (18.06.2014) புதன் கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் மகோற்சவபெருவிழாவும் பதினொராம்நாள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண மங்கள வைபவமும் இனிதே நடைபெறதிருவருள் பாலித்துள்ளது.

உற்சவகாலங்களில்பால்,தயிர், இளநீர், பூ, பூமாலை ஆகிய பொருட்களை வழங்கி முருகப்பெருமானின் அருளைப்  பெறுவீர்களாக!

முருகப்பெருமானின் அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து முருகப்பெருமானின் இஷ்டசித்திகளைப் பெற்று 
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வீர்களாக!

சுபம்

1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages